சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்நடைமுறைகள்லாபரோஸ்கோபிக் கோலிசிஸ்டெக்டோமி

லாபரோஸ்கோபிக் கோலிசிஸ்டெக்டோமி

பித்தப்பை என்றால் என்ன?

பித்தப்பை என்பது பேரிக்காய் வடிவ உறுப்பு ஆகும், இது கல்லீரலின் வலது பக்கத்திற்கு கீழே உள்ளது. கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் செரிமான திரவத்தை (பித்தம் என அழைக்கப்படுகிறது) சேகரித்து கெட்டியாக்குவதே பித்தப்பையின் முக்கிய நோக்கம். சாப்பிட்ட பிறகு பித்தப்பையிலிருந்து பித்தம் வெளியிடப்படுகிறது, அது செரிமானத்திற்கு உதவுகிறது. சிறு குடலுக்குள் தட்டையான குழாய் தடங்கள் (பித்த நாளம்) வழியாக பித்தம் நகர்கிறது. பித்தப்பை அகற்றுவது செரிமானத்தின் எந்தவொரு குறைபாட்டுடனும் தொடர்புடையது அல்ல.

பித்தப்பை கற்கள்

பித்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் பிற பொருட்களிலிருந்து பித்தப்பைகள் உருவாகின்றன. அவை மணல் தானியத்தை விட சிறியதாகவோ கோல்ஃப் பந்தைப் போல பெரியதாகவோ இருக்கலாம் .பருமனானவர்கள் அல்லது விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பித்தப்பைக் கற்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

பித்தப்பையில் பித்தப்பை கற்கள் இருப்பது அக்யூட் கோலிசிஸ்டிடிஸ் எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும், அதாவது பித்தப்பை வீக்கம். இது வயிற்று வலி முதுகுக்கு பரவுதல், வாந்தி, அஜீரணம் மற்றும் எப்போதாவது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

சிலருக்கு ஏன் பித்தப்பை கற்கள் உருவாகிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை

பித்தப்பை பொதுவான பித்த நாளத்தை தடுத்தால், மஞ்சள் காமாலை (தோலின் மஞ்சள் நிறமாற்றம்) ஏற்படலாம். இது உடனடியாக கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நோயாளிகளுக்கு சோலன்ஜைடிஸ் எனப்படும் ஒரு நிலையை

உருவாக்கலாம், இது கடுமையான குளிர் காய்ச்சலை ஏற்படுத்தலாம்.

பித்தப்பை நோய் எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

எம்.ஆர்.ஐ அல்லது எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் (ஈ.யூ.எஸ்) போன்ற சிக்கலான பரிசோதனைகள் செய்யப்படலாம் என்றாலும், பித்தப்பை கற்களைக் கண்டுபிடிக்க அல்ட்ராசவுண்ட் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பரிசோதனை ஆகும். கல்லீரலின் செயல்பாடு இயல்பானதா என்பதை உறுதிப்படுத்த சில இரத்த பரிசோதனைகளும் தேவைப்படும்.

பித்தப்பை கற்கள் தானாகவே வெளியேறுவது இல்லை. சிலருக்கு மருந்துகளின் உதவியுடன் அல்லது கொழுப்பு உட்கொள்ளலைக் குறைப்பது போன்ற உணவு மாற்றங்களைச் செய்வதன் மூலம் தற்காலிகமாக சிகிச்சையளிக்க முடியும். இந்த சிகிச்சையானது குறைந்த, குறுகிய கால வெற்றி விகிதத்தைக் கொண்டது. பித்தப்பை அகற்றப்படாவிட்டால் அறிகுறிகள் தொடரும்.

பித்தப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதே பித்தப்பை நோய்க்கு ஏற்ற மற்றும் பாதுகாப்பான சிகிச்சையாகும்.

யாருக்கு கோலிசிஸ்டெக்டோமி தேவை?

மேலே குறிப்பிட்டுள்ளபடி பித்தப்பை கற்கள் மற்றும் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு கடுமையான சிக்கல்கள் ஏற்படும் முன்பு, கோலிசிஸ்டெக்டோமி செய்யப்பட வேண்டும். சில நேரங்களில் பித்தப்பை கற்கள் இல்லாத நோயாளிகளுக்கு, குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இருந்தால், கோலிசிஸ்டெக்டோமி தேவைப்படும். அரிதாக, பெரிய பித்தப்பை பாலிப்ஸ் (வளர்ச்சிகள்) கொண்ட நோயாளிகளுக்கு பித்தப்பை புற்றுநோய் உருவாகும் சாத்தியக்கூறு இருப்பதால் கோலிசிஸ்டெக்டோமி தேவைப்படும்.

பித்தப்பை எவ்வாறு அகற்றப்படுகிறது?

பித்தப்பை அகற்றுவதற்கான பொதுவான முறை லாபரோஸ்கோபிக் (கீஹோல்) அறுவை சிகிச்சை ஆகும்.

அதி தீவிர ஒளியுடன் இணைக்கப்பட்ட லாபரோஸ்கோப் எனப்படும் கேமரா உங்கள் தொப்புள் (தொப்பை பொத்தான்) வழியாக ஒரு சிறிய கீறல் மூலம் உள்ளே செலுத்தப்படும். அறுவைசிகிச்சை கருவிகளை உள்ளே செலுத்த மூன்று சிறிய பஞ்சர் ஓட்டைகள் போடப்படும் (ஒன்று மேல் அடிவயிற்றில் மற்றும் வலது புறத்தில் உங்கள் விலா எலும்புகளின் கீழ் இரண்டு). அறுவை சிகிச்சை செய்ய இடத்தை வழங்க, உங்கள் வயிறு கார்பன் டை ஆக்சைடால் நிரப்பப்படும். பித்தப்பை கல்லீரலில் இருந்து பிரிக்கப்பட்டு பித்த நாளங்கள் மற்றும் இரத்த நாளங்களுக்கான இணைப்புகள் கிளிப் செய்யப்பட்டவுடன், அது தொப்புள் கீறல் மூலம் அகற்றப்படும்.

சுமார் 3-5% நோயாளிகளுக்கு பித்தப்பையை பாதுகாப்பாக லேபராஸ்கோபிகல் மூலம் அகற்ற முடியாது, அதனால் ஒரு பாரம்பரிய கிழித்து திறக்கும் தொழில்நுட்பம் அங்கு தேவைப்படும் (லேபரோடமி). இதற்கு உங்கள் வலது விலா எலும்புக் கூண்டுக்கு இணையாக உங்கள் மேல் அடிவயிற்றில் 15 செ.மீ கீறல் தேவைப்படும். இது ஒரு பெரிய செயல்முறையாகும், மேலும் இதனால் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்க நேரிடும்.

கிழித்து திறக்கும் செயல்முறைக்கு முன்னேறுவதற்கான தேர்வு, அறுவை சிகிச்சைக்கு முன்பாகவோ அல்லது அறுவை சிகிச்சையின் போதோ உங்கள் மருத்துவர் எடுக்கும் முடிவாக இருக்கும். லேபராஸ்கோபிக் செயல்முறையை கிழித்து திறக்கும் செயல்முறைக்கு மாற்றுவது பாதுகாப்பானது என்று அறுவை சிகிச்சை நிபுணர் உணரும்போது, இது ஒரு சிக்கல் அல்ல, மாறாக அதை தீவிர அறுவை சிகிச்சையின் முடிவாக பார்க்க வேண்டும். கிழித்து திறக்கும் செயல்முறைக்கு மாற்றுவதற்கான தேர்வு நோயாளியின் பாதுகாப்பை மையமாகக் கொண்டது.

பித்தப்பை என்பது ஒரு சேமிப்பக உறுப்பு ஆகும், இது சீரான இடைவெளியில் சுருங்கி பித்தத்தை சிறு குடலுக்குள் செலுத்த உதவுகிறது. பித்தப்பை இல்லாத நிலையில் கூட, பித்தம் கல்லீரலால் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும் மற்றும் சிறிய குடலுக்குள் தொடர்ந்து செல்லும். பித்த நாளங்கள் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து பித்தத்தையும் சேமிக்கும்.

லாபரோஸ்கோபிக் கோலிசிஸ்டெக்டோமிக்குப் பிறகு நான் என்ன எதிர்பார்க்க முடியும்?

நான் எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருப்பேன்?

பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய முதல் நாளில் (உள்-நோயாளி அறுவை சிகிச்சை) வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். இருப்பினும், சில நோயாளிகள் தங்கள் அறுவை சிகிச்சை நாளின் காலையில் மருத்துவமனைக்கு வந்து, அதே நாள் மாலை (பகல் நேர பராமரிப்பு அறுவை சிகிச்சை) வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். உங்கள் வயது, நோய் அறிகுறிகள், உடல் வலிமை மற்றும் பிற நோய்கள் இவற்றை கருத்தில் கொண்டு, உங்கள் அறுவை சிகிச்சை உள்-நோயாளியாகவோ அல்லது பகல்நேர பராமரிப்பாகவோ செய்யப்படவேண்டுமா என்பதை உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் தீர்மானிப்பார்.

அறுவை சிகிச்சைக்கு முன் என்ன நடக்கும்?

அறுவைசிகிச்சைக்குப் பிறகு உங்கள் கவனிப்பு மற்றும் குணமாகும் செயல்முறைக்குத் திட்டமிடுங்கள்,  குறிப்பாக உங்களுக்கு முழு உடல் மயக்க மருந்து தரப்படும் என்றால். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஓய்வெடுக்க விடுதி  கேளுங்கள். உங்கள் அன்றாட வேலைகளுக்கு உதவ வேறு யாரையாவது நியமிக்க முயற்சிக்கவும்.

மருத்துவ காரணங்களுக்கு தினசரி ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டால், உங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பு அதை உட்கொள்வதை நிறுத்த வேண்டுமா என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.

நீங்கள் என்ன மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை உங்கள் மருத்துவரிடம் சொல்ல மறக்காதீர்கள்.

இரத்த பரிசோதனைகள், ஈ.சி.ஜி, மார்பு எக்ஸ்ரே போன்ற மயக்க மருந்து பரிசோதனைகளுக்கு உட்படும்படி உங்களிடம் கேட்கப்படலாம், மேலும் மயக்க மருந்துக்கான உங்கள் தகுதியை மதிப்பிடுவதற்கு மயக்க மருந்து தரும் குழுவால் மதிப்பீடு செய்யப்படும்.

உங்கள் மருத்துவர் உங்களுக்கு வழங்கும் அனைத்து முன் அறுவை சிகிச்சை வழிமுறைகளையும் பின்பற்றவும். அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவு,  நீங்கள் ஒரு லேசான உணவை சாப்பிட பரிந்துரைக்கப்படலாம். திரவங்களை நிறுத்துமாறு மருத்துவர் கேட்ட நேரத்திற்குப் பிறகு காபி, தேநீர், தண்ணீர் அல்லது எந்த திரவத்தையும் குடிக்க வேண்டாம்.

அறுவைசிகிச்சைக்கு முந்தைய இரவில் மலமிளக்கி அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் காலையில் எனிமாவை எடுக்க உங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும்?

அறுவை சிகிச்சை முடிந்ததும், அறுவை சிகிச்சை அறையில் கண் விழிக்க வைக்கப்பட்டு, நோய் மீட்பு பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் கையில் ஒரு நரம்பு வழி குழாய் பொருத்தப்பட்டிருக்கும், அது திரவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்,  ஊழியர்கள் உங்களுக்கு மருந்து கொடுக்க அது உதவுகிறது. உங்கள் வாயில் ஒரு ஆக்ஸிஜன் முகமூடி இருக்கும், அது கூடுதல் ஆக்ஸிஜனை தரும். ஒரு இரத்த அழுத்த சுற்றுப்பட்டை உங்கள் கைகளில் ஒன்றில் இருக்கும், மேலும் உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிட இடைவெளிவிட்டு அது உயர்த்தப்படும். அரிதாக,  சேகரிக்கக்கூடிய எந்தவொரு திரவத்தையும் வெளியேற்ற உங்கள் வயிற்றில் ஒரு வடிகால் குழாய் செலுத்தப்படும்,  குறிப்பாக இது கடினமான அறுவை சிகிச்சை செயல்பாடாக இருந்தால். அறுவைசிகிச்சைக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு நீங்கள் பொதுவாக படுக்கையில் இருந்து வெளியேற முடியும், இருப்பினும் செவிலியர்கள் உங்களுக்கு முதல் முறையாக உதவுவார்கள்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு எவ்வளவு வலி இருக்கும்?

பெரும்பாலானவர்கள் லேசானது முதல் மிதமான வலியை மட்டுமே அனுபவிப்பார்கள், இது வாய்வழி அனல்ஜிஸியா (வலி நிவாரணி) மூலம் உடனடியாக கட்டுப்படுத்தப்படுகிறது. உங்கள் காயங்களில், குறிப்பாக இயக்கத்தின் போது சிறிது வலியை உணரலாம். அப்படி உணர்ந்தால், செவிலியர்கள் வலியைக் குறைக்க உங்களுக்கு மருந்து கொடுப்பார்கள். தோள்பட்டை வலியை நீங்கள் உணரலாம், இது அறுவை சிகிச்சையின் போது உங்கள் வயிற்றுக்குள் செலுத்தப்பட்ட வாயுவிலிருந்து வரும் வலி. இந்த வாயு படிப்படியாக மறைந்துவிடும், ஆனால் அசௌகரியம் பல நாட்கள் நீடிக்கும். மருத்துவமனையில் இருந்து வெளிவரும் போது எப்போது எதை எடுக்க வேண்டும் என்பதற்கான வலி நிவாரணி மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். சுமார் 3 முதல் 5 நாட்களுக்குப் பிறகு பெரும்பாலான அசௌகரியங்கள் மறைந்துவிடும்.

நான் எப்போது அன்றாட வேலைகளை தொடர முடியும்?

உங்கள் வசதிக்கு ஏற்ப உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு திரும்பலாம். அறுவைசிகிச்சைக்குப் பிறகு சோர்வடைவது இயல்பானது, எனவே ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை ஓய்வெடுங்கள், மேலும் ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகு, உங்கள் சாதாரண அன்றாட நடவடிக்கைகளை நீங்கள் மீண்டும் தொடங்க முடியும். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு கனமான பொருட்களை தூக்குவதையோ கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதையோ தவிர்க்க வேண்டும்.

நான் என்ன சாப்பிடலாம்?

பித்தப்பை அகற்றப்பட்ட பிறகு உணவு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை, நீங்கள் பசியை உணரும் போது சாதாரண உணவை மீண்டும் தொடங்கலாம். உங்களுக்கு பசி உணர்வு ஏற்பட சில நாட்கள் ஆகலாம். நீங்கள் பசியை  உணரும்போது லேசான உணவை குறுகிய கால அளவில் எடுக்க தொடங்கவும், பின்னர் உங்கள் வசதிக்கேற்ப அதிகரிக்கவும்.

எனது மலக்குடல் அசைவுகள் எப்போது இயல்பு நிலைக்கு வரும்?

சாதாரண மலக்குடல் இயக்கம் ஏற்பட மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகலாம்.

என்ன சிக்கல்கள் ஏற்படலாம்?

எந்தவொரு அறுவை சிகிச்சையிலும் சிக்கல்கள் எதிர்பார்க்கப்பட்டாலும், லாபரோஸ்கோபிக் கோலிசிஸ்டெக்டோமி நோயாளிகளில் பெரும்பான்மையானவர்கள் குறைவான அல்லது சிக்கல்கள் இல்லாத நிலையை எதிர்கொள்ளுகிறார்கள் மேலும் விரைவாக அன்றாட செயல்முறைகளுக்கு திரும்புகிறார்கள். எந்தவொரு அறுவை சிகிச்சையையும் மேற்கொள்வதற்கு முன் – லேபராஸ்கோபிக் அல்லது கிழித்து திறக்கும் முறை, இதில் எதுவாக இருந்தாலும் உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரிடம் அறுவை சிகிச்சை செயல்முறை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் அபாயங்கள் குறித்து கேட்டு அறிய                       வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

லாபரோஸ்கோபிக் கோலிசிஸ்டெக்டோமியில் சிக்கல்கள் ஏற்படுவது அரிது, ஆனால் இரத்தப்போக்கு, தொற்று,  நிமோனியா, இரத்த உறைவு அல்லது இதய பிரச்சினைகள் ஆகியவை அடங்கும். பொதுவான பித்த நாளம் அல்லது சிறிய குடல் போன்ற அருகிலுள்ள கட்டமைப்புகளுக்கு எதிர்பாராத காயம் ஏற்படக்கூடும், மேலும் அதை சரிசெய்ய மற்றொரு அறுவை சிகிச்சை முறை தேவைப்படலாம்.

லேபராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கான சிக்கல் வீதம் முறையாக பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரால் செய்யப்படும்போது உண்மையில் மிகக் குறைவு என்று பல மருத்துவ ஆய்வுகள் காட்டுகின்றன.

Quick Book

Request A Call Back

X