சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்இதய ஆஞ்சியோபிளாஸ்டி

இதய ஆஞ்சியோபிளாஸ்டி

இதய ஆஞ்சியோபிளாஸ்டி என்றால் என்ன?

தோல்வழியான இதய சிகிச்சை எனவும் அழைக்கப்படும் இதய ஆஞ்சியோபிளாஸ்டி என்பது இதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் தமனிகள் அடைக்கப்பட்டிருப்பதைத் திறக்க பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சை முறையாகும். இந்த தமனிகள் இதய இரத்தத் தமனிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆஞ்சியோபிளாஸ்டி என்பது தமனி அடைக்கப்பட்டுள்ள இடத்தில் தமனியை விரிவுப்படுத்த உதவ ஒரு சிறிய பலூனை தற்காலிகமாக செருகி காற்றை அதற்குள் ஊதுவதாகும்.

தமனியைத் திறந்து, மீண்டும் சுருங்குவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவும் ஸ்டென்ட் எனப்படும் சிறிய கம்பி வலைக் குழாயை நிலையாக வைப்பதுடன் ஆஞ்சியோபிளாஸ்டி பொதுவாக  இணைக்கப்படுகிறது. சில ஸ்டென்ட்கள் (மருந்து கரையும் ஸ்டென்ட்கள்) உங்கள் தமனியைத் திறந்து வைக்க உதவும் மருந்துகளால்  பூசப்படுகின்றன, அதே நேரத்தில் மற்ற ஸ்ட்டென்ட்களில் (வெற்று உலோக ஸ்டென்ட்கள்) பூசப்படுவதில்லை. எல்லோருக்கும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய முடியாது. உங்கள் இதயத்தின் இடதுபுறத்திற்கு இரத்தத்தைக் கொண்டுவரும் முக்கிய தமனி குறுகலாக இருந்தால், உங்கள் இதய தசை பலவீனமாக இருந்தால் அல்லது உங்களிடம் பல நோயுற்ற இரத்த நாளங்கள் இருந்தால், இதய தமனி பைபாஸ் அறுவை சிகிச்சையானது ஆஞ்சியோபிளாஸ்டியை விட சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த முக்கியமான மருத்துவ முடிவு பல்வேறு தகுதிநிலைகளை அடிப்படையாகக் கொண்டதாகும் மற்றும் அப்பல்லோ இதய குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இதய தமனி பைபாஸ் அறுவை சிகிச்சையில், உங்கள் உடலின் மற்றொரு பகுதியிலுள்ள ஒரு இரத்த நாளத்தைப் பயன்படுத்தி உங்கள் தமனியின் அடைக்கப்பட்ட பகுதிக்கு மாற்று வழி ஏற்படுத்தப்படுகிறது.

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு எதிரான ஆஞ்சியோபிளாஸ்டி தேர்வானது உங்கள் நோயின் அளவு, இதய தமனிகளிலுள்ள அடைப்புகளின் அளவு மற்றும் உங்கள் ஒட்டுமொத்த நோய் நிலை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கும்.

நீங்கள் எவ்வாறு தயாராகிறீர்கள்?

ஆஞ்சியோபிளாஸ்டி செய்வதற்கு முன், உங்கள் மருத்துவர் உங்கள் மருத்துவ வரலாற்றை மதிப்பிட்டு, உடலை பரிசோதனை செய்வார்.

உங்கள் அடைப்புகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சிகிச்சையளிக்க முடியுமா என்பதைப் பார்க்க, இதய ஆஞ்சியோகிராம் எனப்படும் படமெடுக்கும் பரிசோதனையையும் உங்களுக்கு செய்வார். உங்கள் இதயத்திற்குச் செல்லும் தமனிகள் சுருங்கிவிட்டதா அல்லது அடைபட்டுள்ளதா என்பதைக் கண்டறிய இதய ஆஞ்சியோகிராம் ஆனது மருத்துவர்களுக்கு உதவுகிறது. ஒரு இதய ஆஞ்சியோகிராமில், உங்கள் இடுப்பு, கை அல்லது மணிக்கட்டில் இருந்து உங்கள் இதயத்திலுள்ள தமனிகள் வரை தமனி வழியாக செல்லும் ஒரு நீண்ட மெல்லிய குழாய் வழியாக உங்கள் இதயத்தின் தமனிகளுக்குள் திரவ சாயம் செலுத்தப்படுகிறது. சாயம் உங்கள் தமனிகளுக்குள் நுழையும் போது, அவை எக்ஸ்ரே மற்றும் வீடியோவில் தெரியும், இதன்மூலம் உங்கள் தமனிகள் எங்கு அடைக்கப்படுகின்றன என்பதை உங்கள் மருத்துவரால் பார்க்க முடியும். உங்கள் இதய ஆஞ்சியோகிராமின் போது உங்கள் மருத்துவர் ஒரு அடைப்பைக் கண்டறிந்தால், ஆஞ்சியோகிராமிற்குப் பிறகு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் செய்ய அவர் முடிவு செய்யலாம், அதே நேரத்தில் உங்கள் இதயதிற்குள் இன்னும் குழாய் செருகப்படுகிறது.

பொதுவாக, இந்த சிகிச்சை முறை திட்டமிடப்படுவதற்கு ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் சாப்பிடுவதை அல்லது குடிப்பதை நிறுத்திவிட வேண்டும். உங்கள் சிகிச்சை முறைக்கு முன்பு நீங்கள் ஏற்கனவே மருத்துவமனையில் தங்கியிருந்தால் நீங்கள் தயாராவது வேறுவிதமாக இருக்கலாம்.

மார்பு எக்ஸ்ரே, எலக்ட்ரோ கார்டியோகிராம் மற்றும் இரத்த பரிசோதனைகள் உட்பட சில வழக்கமான பரிசோதனைகளும் உங்களுக்கு முதலில் செய்யப்படும்.

ஆஞ்சியோபிளாஸ்டி செய்வதற்கு முன் உங்களுடைய தற்போதைய மருந்துகளை ஒழுங்குபடுத்துவது பற்றி உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றவும். ஆஞ்சியோபிளாஸ்டி செய்வதற்கு முன் சில மருந்துகளை எடுப்பதை நிறுத்துமாறு உங்கள் மருத்துவர் உங்களிடம் அறிவுறுத்தலாம்.

நோய் கண்டறியும் பரிசோதனையில் பயன்படுத்தப்படும் சாயங்களினால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் முந்தைய ஒவ்வாமை பாதிப்புகள் ஆகியவற்றைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

இந்த சிகிச்சை முறையின் போது

உங்களுக்கு என்ன நடக்கும்

கால், கை அல்லது மணிக்கட்டிலுள்ள ஒரு இரத்த நாளத்தின் மீதுள்ள தோலில் மிகச் சிறிய கீறல் போடப்பட்டு, இதன் வழியாக ஒரு சிறிய, மெல்லிய குழாய் செலுத்தப்பட்டு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டி ஆனது இதய சிலாகையேற்றல் ஆய்வகம் (கேத் லேப்) எனப்படும் ஒரு சிறப்பு அறுவை சிகிச்சை அறையில் இதய மருத்துவர் (கார்டியாலஜிஸ்ட்) மற்றும் இதய சிறப்பு செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் செய்யப்படுகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டி பொதுவாக காயம் மற்றும் சிக்கல் அளவைப் பொறுத்து  உங்கள் மணிக்கட்டு பகுதியிலுள்ள தமனி (ரேடியல் தமனி) அல்லது உங்கள் இடுப்பு பகுதியிலுள்ள தமனி (ஃபெமோரல் தமனி) வழியாக செய்யப்படுகிறது. உங்கள் கை அல்லது மணிக்கட்டு பகுதியில் உள்ள தமனியைப் பயன்படுத்தி அரிதாகவே செய்யப்படலாம். சிகிச்சை முறைக்கு முன், அந்த பகுதியானது ஒரு கிருமி நாசினி கரைசலைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது

மற்றும் உங்கள் உடலின் மீது ஒரு நோய் நுண்மை நீக்கப்பட்ட தாள் வைக்கப்படுகிறது.

குழாய் செருகப்படும் இடத்தை மரத்துப்போகச் செய்ய ஒரு வழக்கமான மயக்க மருந்து செலுத்தப்படுகிறது. சிகிச்சை முறையின் போது உங்கள் இதயத்தை கண்காணிக்க சிறிய எலக்ட்ரோடு பட்டைகள் உங்கள் மார்பில் வைக்கப்படுகின்றன

பொதுவான மயக்க மருந்து தேவையில்லை. நீங்கள் மயக்கமடையச் செய்யப்படுவீர்கள், ஆனால் சிகிச்சையின் போது விழித்திருப்பீர்கள். IV குழாய் வழியாக திரவங்கள், உங்களை பதட்டத்தைத் தணிக்கும் மருந்துகள் மற்றும் இரத்த உறைவைக் கரைக்கும் மருந்துகள் (ஆன்டிகோகுலண்ட்கள்) ஆகியவை உங்களுக்கு அளிக்கப்படும்.

அதன்பின், சிகிச்சை முறை ஆரம்பமாகிறது:

கீறல் போட்ட பகுதியை மரத்துப்போகச் செய்த பிறகு, உங்கள் கால் அல்லது கையில் உள்ள தமனிக்குள் நுழைய ஒரு சிறிய ஊசி பயன்படுத்தப்படுகிறது. தோலில் ஒரு சிறிய வெட்டு போடப்படுகிறது.

உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய வழிகாட்டி கம்பியைச் செருகுகிறார், அதைத் தொடர்ந்து ஒரு மெல்லிய குழாயை உங்கள் இதயத்திலுள்ள அடைப்பை அடையும் வரை தமனிக்குள் செருகுகிறார்.

ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படும் பெரும்பாலானவர்களுக்கு இந்த சிகிச்சை முறையின் போது அவர்களுடைய அடைபட்ட தமனியில் ஒரு ஸ்டென்ட் வைக்கப்படுகிறது. ஊதப்பட்ட பலூனால் தமனி விரிவுபடுத்தப்பட்ட பிறகு ஸ்டென்ட் பொதுவாக அதில் செருகப்படுகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகு தமனி மீண்டும் சுருங்குவதைத் தடுக்க ஸ்டென்ட் உங்கள் தமனியின் சுவர்களைத் தாங்குகிறது. ஸ்டென்ட் ஆனது சிறிய வலை சுருள் போல தோற்றமளிக்கிறது.

ஸ்டென்ட் எவ்வாறு வைக்கப்படுகிறது?

குழாயின் முனையிலுள்ள பலூனைச் சுற்றி இருக்கும் ஸ்டென்ட் ஆனது தமனி வழியாக அடைப்புக்குள் செலுத்தப்படுகிறது.

அடைப்பிற்குள் பலூன் ஊதப்படுகிறது, ஸ்பிரிங் போன்ற ஸ்டென்ட் பெரிதாகி, தமனியின் உட்புறம் மாட்டிக் கொள்கிறது.

தமனியை திறந்தே வைத்திருப்பதற்கும், உங்கள் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் ஸ்டென்ட் ஆனது தமனிக்குள்ளேயே எப்போதும் இருக்கிறது. சில நேரங்களில், அடைப்பைத் திறக்க ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்டென்ட் தேவைப்படலாம்.

ஸ்டென்ட் வைக்கப்பட்டதும், பலூன் குழாய் நீக்கப்பட்டு, சமீபத்தில் விரிவடைந்த உங்கள் தமனி வழியாக இரத்தம் எவ்வாறு பாய்கிறது என்பதைப் பார்க்க அதிகமான படங்கள் (ஆஞ்சியோகிராம்) எடுக்கப்படுகின்றன.

இறுதியாக, வழிகாட்டி குழாய் நீக்கப்பட்டு, அறுவை சிகிச்சை நிறைவடைகிறது.

உங்களுக்கு ஸ்டென்ட் வைத்த பிறகு, ஸ்டென்டில் இரத்த உறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க ஆஸ்பிரின் அல்லது குளோபிடோகிரல் போன்ற மருந்துகளை எடுக்கும் நீண்ட கால சிகிச்சையை நீங்கள் பெற வேண்டியதிருக்கலாம்.

நாளங்களின் எண்ணிக்கை, அடைப்பின் அளவு, வயது, காரைபடிந்த நாளங்கள் போன்றவற்றைப் பொறுத்து சுமார் 90 நிமிடங்கள் முதல் 150 நிமிடங்கள் வரை இந்த அறுவை சிகிச்சைக்கு நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவமனைகளில், இன்ட்ரா-வாஸ்குலர் அல்ட்ராசவுண்ட் (IVUS), ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி (OCT) மற்றும் ஃப்ராக்‌ஷனல் ஃப்ளோ ரிசர்வ் (FFR) போன்ற நவீன படமெடுக்கும் நுட்பங்கள் எங்களிடம் உள்ளன. இன்ட்ராகோரோனரி இமேஜிங்கில் இரத்த நாளம் மற்றும் அடைப்பு அளவுகளை துல்லியமாக அளவிடுதல், இரத்த நாளத்தின் தன்மையை மதிப்பிடுதல், காய அமைப்பை வகைப்படுத்துதல் மற்றும் சரியான தோல்வழி இதய சிகிச்சைக்கு (PCI) வழிகாட்டுதல் ஆகிய திறன்களைப் பெற்றுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு

உங்களுக்கு அதிக ஆபத்து நிறைந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்திருந்தால், நீங்கள் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும்; இதில் 1 அல்லது 2 நாட்கள் நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் கவனமாகக் கண்காணிக்கப்படுவீர்கள் மற்றும் வீட்டிற்குச் செல்வதற்கு ஒரு நாளைக்கு முன் வார்டுக்கு மாற்றப்படுவீர்கள். குறைவான ஆபத்துள்ள அறுவை சிகிச்சைகளில், நோயாளிகள் அடுத்த நாளே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆஞ்சியோபிளாஸ்டி செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு பொதுவாக உங்களால் வேலைக்குச் செல்ல முடியும் அல்லது உங்கள் வழக்கமான வேலையை மீண்டும் செய்ய முடியும்.

நீங்கள் வீட்டிற்கு சென்ற பிறகு, மாறுபட்ட சாயமுள்ள உங்கள் உடலை சுத்தம் செய்ய நிறைய தண்ணீர் குடிக்கவும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது ஒரு நாளைக்காவது கடுமையான உடற்பயிற்சியையும், கனமான பொருட்களைத் தூக்குவதையும் தவிர்க்கவும். செயல்பாட்டில் உள்ள

பிற கட்டுப்பாடுகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.

ஆஞ்சுயோபிளாஸ்டிக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்

இரத்த உறைவைக் கரைக்கும் மருந்துகள்

இரத்த உறைவைக் கரைக்கும் மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் ஆகிவற்றுடன் உங்கள் சிகிச்சையைப் பற்றிய உங்கள் மருத்துவரின் பரிந்துரைகளை நீங்கள் கவனமாகப் பின்பற்றுவது முக்கியமானதாகும். உங்கள் இதய மருத்துவரிடம் பரிசோதிக்காமல் எந்த மருந்தையும் நிறுத்த வேண்டாம்.

இதயத்தை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற்றுதல்

இதய ஆஞ்சியோபிளாஸ்டியானது முன்பு சுருங்கி அல்லது அடைக்கப்பட்டிருந்த இதய தமனி வழியாக இரத்த ஓட்டத்தை கணிசமாக அதிகரிக்கிறது. உங்கள் நெஞ்சு வலி பொதுவாக குறைய வேண்டும், உங்களால் நன்றாக உடற்பயிற்சி செய்ய முடியும்.

ஆஞ்சியோபிளாஸ்டி செய்தல் மற்றும் ஸ்டென்ட் வைத்தல் என்றால் உங்கள் இதய நோயைத் தீர்த்தல் என்று அர்த்தமில்லை. நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கத்தைத் தொடர வேண்டும்

மற்றும் உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகு உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, நீங்கள் செய்ய வேண்டியவை:

புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும்

உங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க வேண்டும்

ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும்

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற கோளாறுகளை சரிப்படுத்த வேண்டும்

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

Quick Book

Request A Call Back

X