சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்நடைமுறைகள்அடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்குதல் – கருப்பையை அகற்றுதல்

அடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்குதல் – கருப்பையை அகற்றுதல்

அடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்குதல் என்றால் என்ன?

அடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்குதல் என்பது அடிவயிற்றில் ஒரு வெட்டுப் போட்டு கர்ப்பப்பையை நீக்கும் ஒரு செயல்முறையாகும். கர்ப்பப்பை என்பது பிறப்புறுப்பின் மேல்பகுதியில் காணப்படும் தசையாலான ஒரு உறுப்பாகும். கர்ப்பப்பைக்குள் குழந்தைகள் உருவாகின்றன, மாதவிடாய் இரத்தப்போக்கும் கர்ப்பப்பையிலிருந்துதான் உண்டாகிறது.

அடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்குதல் பல முறைகளில் செய்யப்படுகிறது.

மொத்த கர்ப்பப்பை நீக்குதலில் கர்ப்பப்பையும் கர்ப்பப்பை வாயும் (கர்ப்பப்பையின் கழுத்து) நீக்கப்படுகின்றன

சாதாரண கர்ப்பப்பை நீக்குதலில் கர்ப்பப்பை மட்டும் நீக்கப்படுகிறது, கர்ப்பப்பை வாய் நீக்கப்படுவதில்லை

சல்பிங்கோ ஓபோரெக்டோமி அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை நீக்குதலில் கர்ப்பப்பைகள் மற்றும் கர்ப்பப்பை குழாய்கள் இவற்றில் ஒன்று அல்லது இரண்டுமே நீக்கப்படும்

இருபக்க சல்பிங்கெக்டோமி மூலம் கர்ப்பப்பையை நீக்குதலில் கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை குழாய்கள் இரண்டும் நீக்கப்படும்.

நீங்கள் எந்த வகையான கர்ப்பப்பை நீக்கம் செய்கிறீர்கள் என்பது உங்கள் மருத்துவ நிலையைப் பொறுத்ததாகும்,

மேலும் அறுவை சிகிச்சைக்கு முன் உங்கள் மகப்பேறு மருத்துவர் உங்களுடன் கலந்தாலோசிப்பார்.

அடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்குவதற்கு உங்களுக்கு மயக்க மருந்து தேவைப்படும். இது ஒரு பொதுவான அல்லது உறுப்பு சார்ந்த (முதுகெலும்பு அல்லது வால் பகுதித் தண்டுவடம்) மயக்க மருந்தாக இருக்கும்.

கருப்பைகள் மற்றும் கர்ப்பப்பை குழாய்கள் கொண்ட கர்ப்பப்பை

கர்ப்பப்பை நீக்கம் எப்போது செய்யப்படுகிறது?

கர்ப்பப்பையை ஏன் நீக்க வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கர்ப்பப்பையை நீக்குவதன் மூலம் சிகிச்சையளிக்கப்படக்கூடிய சில கோளாறுகள்:

மருந்துகள் அல்லது விரிவுபடுத்துதல் மற்றும் சுரண்டுதல் (D&C) ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படாத தொடர்ச்சியான கடுமையான இரத்தப்போக்கு

வலி அல்லது இரத்தப்போக்கு உண்டாக்குகிற கர்ப்பப்பை உள்வரிச் சவ்வானது பிற சிகிச்சைகளுக்கு பலனளிப்பதில்லை

வலி அல்லது இரத்தப்போக்கு உண்டாக்குகிற கர்ப்பப்பை உள்வரிச் சவ்வானது பிற சிகிச்சைகளுக்கு பலனளிப்பதில்லை

நாள்பட்ட இடுப்பு வலி

கர்ப்பப்பை வெளித்தொங்குதல் – தொங்கிய (தொய்வான) கர்ப்பப்பை

கர்ப்பப்பையில் காணப்படும் புற்றுநோய் அறிகுறி அல்லது புற்றுநோய் செல்கள் அல்லது திசு

கர்ப்பப்பையிலுள்ள கட்டிகள்

கர்ப்பப்பை நீக்கப்படக்கூடிய பிற வழிகள்:

பிறப்புறுப்பு வழியாக கர்ப்பப்பையை நீக்குதல் – பிறப்புறுப்பு வழியாக கர்ப்பப்பை நீக்கப்படுகிறது

அடிவயிற்றில் போடப்பட்ட சிறிய கீறல்கள் வழியாக லேபராஸ்கோபி மூலம் கர்ப்பப்பையை நீக்குதல்

ரோபோடிக் முறையில் கர்ப்பப்பையை நீக்குதல்

ஹிஸ்டரோஸ்கோபி, லேபரோஸ்கோபி, ரோபோடிக் முறை அறுவை சிகிச்சையானது பின்வருபவற்றுக்குப் பயன்படுத்தப்படலாம்:

கர்ப்பப்பையை நீக்காமல் கர்ப்பப்பை உள்வரிச் சவ்வின் ஒரு பகுதியை நீக்குவதற்கு

கர்ப்பப்பையை நீக்காமல் கட்டிகளை (நார்த்திசுக்கட்டிகள்) நீக்குவதற்கு

இந்த விருப்பங்கள் குறித்து உங்கள் மருத்துவரிடம் நீங்கள் கேட்க வேண்டும், ஆனால் உங்கள் நோய் நிலைமைக்கு மிகவும் பொருத்தமான கர்ப்பப்பை நீக்குதல் முறையை உங்கள் மருத்துவர் தேர்ந்தெடுத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் நோய் நிலைமைக்கு சில நுட்பங்கள் சிறந்த தேர்வாக இருக்காது என்பதை மனதில் கொள்ளவும்.

அடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்குவதற்கு நான் எவ்வாறு தயாராக வேண்டும்?

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, குறிப்பாக நீங்கள் பொதுவான மயக்க மருந்து எடுக்க வேண்டுமென்றால், உங்கள் பராமரிப்பு மற்றும் சுகப்படுதலுக்கு திட்டமிடவும் வேலையில் ஓய்வெடுக்க நேரம் தருமாறு கேட்டுக் கொள்ளவும். உங்கள் அன்றாட வேலைகளில் உங்களுக்கு உதவ மற்றவர்களை நாட முயற்சி செய்யவும்.

நீங்கள் ஒரு நோய் நிலைமைக்காக தினமும் ஆஸ்பிரின் எடுப்பவராக இருந்தால், உங்கள் அறுவை சிகிச்சைக்கு முன் நீங்கள் அதை உட்கொள்வதை நிறுத்த வேண்டுமா என்று உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.

நீங்கள் என்ன மருந்துகளை உள்கொள்கிறீர்கள் என்பதை உங்கள் மருத்துவரிடம் கட்டாயம் சொல்ல வேண்டும்.

மயக்க மருந்து கொடுப்பதற்கு முன் இரத்த பரிசோதனைகள், ஈ.சி.ஜி, மார்பு எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை செய்யுமாறு  உங்களிடம் கேட்டுக் கொள்ளப்படலாம், மேலும் மயக்க மருந்து கொடுப்பதற்கு உங்கள் உடல் தகுதியை மதிப்பிடுவதற்கு மயக்க மருந்து குழுவால் நீங்கள் மதிப்பீடு செய்யப்படலாம்.

உங்கள் மருத்துவர் உங்களுக்கு வழங்கும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறிவுரைகள் அனைத்தையும் பின்பற்றவும்.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவு பொதுவாக லேசான உணவை சாப்பிடுமாறு உங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம். மருத்துவர் உங்களிடம் திரவ ஆகாரங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொண்ட நேரத்திற்குப் பிறகு காபி, டீ, தண்ணீர் அல்லது எந்த திரவத்தையும் குடிக்கக் கூடாது.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவு நீங்கள் உட்கொள்வதற்கு மலமிளக்கி கொடுக்கப்படலாம் அல்லது அறுவை சிகிச்சைக்கு முன்பு காலையில் எனிமா கொடுக்கப்படலாம்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும்?

அறுவை சிகிச்சைக்கு 1 அல்லது 2

நாட்களுக்குப் பிறகு IV மற்றும் சிறுநீர் வடிகுழாய் ஆகியவை நீக்கப்படுகின்றன. நீங்கள் 3 முதல் 5 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியதிருக்கலாம்.

நீங்கள் வீட்டிற்குச் சென்ற பிறகு, அதிகமாக ஓய்வு எடுக்க வேண்டும். 4 முதல் 6 வாரங்களுக்கு எந்தவொரு கனமான பொருளையும் தூக்கவோ அல்லது அடிவயிற்றுத் தசைகளை அழுத்தும் விதத்தில் எந்த வேலையும் செய்யவோ கூடாது.

வலியைக் குறைப்பதற்கும் மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உங்கள் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றவும்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு மாதவிடாய் இருந்தால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களுக்கு ஒருபோதும் மாதவிடாய் வராது. உங்களால் கர்ப்பமாக முடியாது. உங்கள் கர்ப்பப்பைகள் நீக்கப்பட்டால், மாதவிடாய் உடனே நின்றுபோய் விடும், உங்கள் மருத்துவர் ஹார்மோன் சிகிச்சையை பரிந்துரைக்கலாம். இந்த பாதிப்புகள் மற்றும் சிகிச்சையைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அறுவை சிகிச்சைக்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

அடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்கிய பிறகு நான் எதை எதிர்பார்க்கலாம்?

பொதுவான மயக்க மருந்துகளின் எதிர்விளைவுகள்

பெரும்பாலான நவீன மயக்க மருந்துகள் குறுகிய காலமே நீடிக்கக்கூடியவையாக இருக்கின்றன. உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு நாளுக்கு மேல் எந்த பின்விளைவுகளும் உங்களுக்கு ஏற்படாது அல்லது அவற்றால் பாதிக்கப்படமாட்டீர்கள். முதல் 24 மணிநேரத்திற்கு நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக தூக்கம் வருவது போல உணரலாம் மற்றும் உங்கள் சிந்தனை திறன் பாதிக்கப்படலாம்.

சிறுநீர் வடிகுழாய்

உங்கள் சிறுநீரை வெளியேற்றுவதற்கு உங்கள் சிறுநீர்ப்பையில் ஒரு வடிகுழாய் (குழாய்) வைப்பதற்கு உங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம். இது பொதுவாக உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 24 மணிநேரம் வரை, நீங்கள் சிறுநீர் கழிக்க கழிப்பறைக்கு எளிதாக நடக்க முடிகிற வரை இருக்கும். சிறுநீர் கழிப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், நீங்கள் சில நாட்களுக்கு சிறுநீர் வடிகுழாய் வைத்திருக்க வேண்டியதிருக்கும்.

தழும்பு

பொதுவாக அடிவயிற்று வழியாக கர்ப்பப்பையை நீக்குதல் சுமார் 10 செ.மீ நீளமுள்ள வெட்டு வழியாக செய்யப்படுகிறது. பொதுவாக உங்கள் அந்தரங்க மயிர்ப் பகுதிக்கு மேலே குறுக்காக இந்த வெட்டு போடப்ப்படுகிறது, ஆனால் சில நேரங்களில் இது உங்கள் தொப்பிலில் இருந்து உங்கள் அந்தரங்க மயிர்ப் பகுதி வரை போடப்படும்.

தையல்களும் கட்டுகளும்

உங்களுக்குப் போடப்பட்ட வெட்டானது தையல்கள், ஸ்டேபிள்கள், கிளிப்புகள் அல்லது பசை மூலம் மூடப்படும். பசை மற்றும் சில தையல்கள் தானாகவே மறைந்துவிடுகின்றன. பிற தையல்கள், கிளிப்புகள் அல்லது ஸ்டேபிள்களை நீக்க வேண்டியதிருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் பிறப்புறப்பில் போடப்பட்ட தையல்கள் தானாகவே மறையக்கூடியவை என்பதனால் அவற்றை நீக்க வேண்டியதில்லை.

வடிகுழாய்

சில நேரங்களில், உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சேரக்கூடிய அதிகப்படியான இரத்தம் அல்லது திரவத்தை வெளியேற்ற உங்கள் அடிவயிற்று சுவர் வழியாக ஒரு சிறிய குழாய் செருகப்படுகிறது. உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் மருத்துவமனையில் இருக்கும் போதே இது ஒரு நர்ஸால் நீக்கப்படும்.

பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு

உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு பிறப்புறுப்பில் கொஞ்சம் இரத்தப்போக்கு ஏற்படலாம். இது கொஞ்சம் மாதவிடாய் காலம் போல இருக்கும், இது சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும். சில பெண்களுக்கு முதலில் சிறிதளவு இரத்தப்போக்கு இருக்கும் அல்லது இரத்தப்போக்கே இருக்காது, அதன்பின் சுமார் 10 நாட்களுக்குப் பிறகு திடீரென பழைய இரத்தம் அல்லது திரவம் கொட்டுகிறது. இது பொதுவாக உடனடியாக நின்றுவிடுகிறது, இந்த நேரத்தில் நீங்கள் பஞ்சுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சுகாதார குட்டைகளைப் (sanitary towels) பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் பஞ்சுகளைப் பயன்படுத்துவது நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும்.

வலி மற்றும் அசௌகரியம்

உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது ஒரு சில நாட்களுக்கு உங்கள் அடிவயிற்றில் வலி மற்றும் சிரமம் ஏற்படலாம். மருத்துவமனையை விட்டுச் செல்லும் போது, நீங்கள் அனுபவிக்கும் வலிக்கு உங்களுக்கு வலி நிவாரணி மருந்துகள் கொடுக்கப்படும்.

அடைபட்ட காற்று

உங்கள் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து உங்கள் குடல் சிறிது நேரம் மெதுவாக செயல்கிறது, இதனால் காற்று அடைபட்டிருக்கக்கூடும். இது வெளியேறும் வரை கொஞ்சம் வலி அல்லது சிரமம் ஏற்படலாம். படுக்கையில் இருந்து எழுந்து நடப்பது சற்று நிவாரணமளிக்கும். குடல் இயக்கங்கள் ஆரம்பித்ததும், அடைபட்ட காற்று நீங்கிவிடும்.

சாப்பிட மற்றும் குடிக்க ஆரம்பித்தல்

உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, திரவங்களை ஏற்ற உங்கள் கையில் IV டிரிப் ஏற்றப்படலாம். உங்களால் மீண்டும் திரவங்களை குடிக்க முடியும் போது, டிரிப் ஏற்றுவது நீக்கப்படும். உங்களுக்கு தண்ணீர் அல்லது ஒரு கப் டீ மற்றும் சாப்பிட லேசான உணவு ஏதாவது கொடுக்கப்படும்.

இரத்த உறைவு ஏற்படும் ஆபத்தை குறைப்பது எப்படி

எந்தவொரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உங்கள் கால்கள் மற்றும் இடுப்புகளிலுள்ள நரம்புகளில் இரத்த உறைவுகள் (ஆழமான நரம்பு இரத்த உறைவு) ஏற்பட சிறிதளவு வாய்ப்புள்ளது. இந்த இரத்த உறைவுகள் நுரையீரல் (நுரையீரல் அடைப்பு) வரை செல்லக்கூடும், இது உயிருக்கு ஆபத்தாக அமையலாம். இரத்த உறைவுகள் ஏற்படும் ஆபத்தை பின்வருபவற்றை செய்வதன் மூலம் குறைக்கலாம்:

உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களால் முடிந்தவரை வேகமாக நடக்க ஆரம்பிக்க வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் ஓய்வெடுக்கும் போது உடற்பயிற்சிகளைச் செய்யவும்: உங்கள் கணுக்காலை அசைத்து ஒவ்வொரு பாதத்தையும் 30 விநாடிகளுக்கு சுறுசுறுப்பாக அழுத்தவும் அல்லது உங்கள் கால்களை மடக்கி நீட்டவும், ஒவ்வொரு காலையும் ஒரு நேரத்தில் மூன்று முறை இவ்வாறு செய்யவும்.

இரத்த உறைவு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க குறிப்பாக நீங்கள் அதிக உடல் பருமனுள்ளவராக இருந்தால் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், பிற முறைகளும் உங்களுக்கு அறிவுறுத்தப்படலாம்.

பிசியோதெரபி

நீங்கள் விரைவாக குணமடைவதற்கு உதவும் உடற்பயிற்சிகளையும் சிரமமில்லாமல் நடப்பதற்கான வழிகளையும் பற்றிய வழிகாட்டுதல்களும் தகவல்களும் உங்களுக்கு வழங்கப்படும்

சோர்வு மற்றும் உணர்ச்சிவசப்படுதல்

உங்கள் உடல் தன்னை குணப்படுத்திக்கொள்ள ஏராளமான சக்தியைப் பயன்படுத்துவதனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு வழக்கத்தை விட அதிகமாக நீங்கள் சோர்வாக உணரலாம். முதல் சில நாட்களுக்கு நீங்கள் பகலில் தூங்க வேண்டியதிருக்கலாம். கர்ப்பப்பை நீக்குதல் என்பது உணர்ச்சிகரமான அதிர்ச்சியாக இருக்கலாம், இந்த நேரத்தில் பல பெண்கள் சோகமாகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இந்த அறுவை சிகிச்சையுடன் தொடர்புடைய ஆபத்துகள் எவை?

எந்த இரத்தப்போக்கையும் நிறுத்துவதற்கு உங்கள் அடிவயிற்றில் போடப்பட்ட வெட்டு (கீறல்) மீண்டும் திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம்

உங்கள் சிறுநீர்ப்பை அல்லது அதற்குச் செல்லும் குழாய்கள் காயப்படலாம், இதை அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்

உங்களுக்கு நோய்த்தொற்று அல்லது இரத்தப்போக்கு ஏற்படலாம்

வெட்டு திறக்கப்படலாம்

வெட்டு போட்ட இடத்தில் உங்களுக்கு குடலிறக்கம் ஏற்படலாம்

இந்த ஆபத்துகள் உங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்

Quick Book

Request A Call Back

X