சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்நடைமுறைகள்இதய தமனி பைபாஸ் ஒட்டு அறுவை சிகிச்சை

இதய தமனி பைபாஸ் ஒட்டு அறுவை சிகிச்சை

CABG அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் என்ன?

இதய தமனி பைபாஸ் மாற்று (CABG) அறுவை சிகிச்சை என்பது இதய தமனி வழியாக இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஒரு அறுவைச சிகிச்சையாகும். இதய தமனி நோய் எனப்படும் கடுமையான இதய நோயால் (CHD) பாதிக்கப்பட்டவர்களை இது குறிப்பிடுகிறது.

CHD என்பது இதய தமனியின் உட்புறம் கொழுப்பு படிவு எனப்படும் ஒரு பொருள் உருவாவதனால் ஏற்படும் ஒரு கோளாறாகும். இந்த தமனிகள் உங்கள் இதயத்திற்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை விநியோகிக்கின்றன. கொழுப்பு படிவானது கொழுப்பு, கொலஸ்ட்ரால், கால்சியம் மற்றும் இரத்தத்தில் காணப்படும் பிற பொருட்களால் ஆனதாகும். கொழுப்பு படிவானது இதயத் தமனிகளை சுருங்கச் செய்யும் அல்லது அடைப்பை ஏற்படுத்தும் மற்றும் இதய தசையில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கும். அடைப்பு கடுமையானதாக இருந்தால், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் மற்றும் சில

கடுமையான நெஞ்சு வலி ஏற்படுகிறது, லேசான உடற்பயிற்சியின் போது அல்லது ஓய்வாக இருக்கும் போது கூட தசையில் இரத்தம் குறைகிறது. சில நேரங்களில் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் உதவும், ஆனால் சில வகையான அடைப்புகளுக்கு, இதய பைபாஸ் அறுவை சிகிச்சை சிறந்த தேர்வாக இருக்கும்.

உங்களிடம் ஒன்றுக்கும் அதிகமான நோயுற்ற இதய தமனி உள்ளது மற்றும் இடது வென்ட்ரிக்கிளான இதயத்தின் முக்கிய பம்பிங் அறை சரியாக செயல்படவில்லை.

உங்கள் இடதுபக்க முக்கிய இதய தமனி கடுமையாக சுருங்குகிறது அல்லது அடைக்கப்படுகிறது. இந்த தமனி பெரும்பாலான இரத்தத்தை இடது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது பொருத்தமற்றதாக இருக்கும் அடைப்பு உங்களுக்கு இருக்கிறது, நீங்கள் முன்பே ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டென்ட் வைத்திருக்கிறீர்கள் – இது வெற்றி பெறவில்லை அல்லது உங்களுக்கு ஸ்டென்ட் வைக்கப்பட்டது, ஆனால் தமனி மீண்டும் சுருங்கிவிட்டது (ரெஸ்டெனோசிஸ்).

வேறு சிகிச்சைகள் உங்களுக்கு பலனிளிக்கவில்லை என்பதை உங்கள் மருத்துவர் கண்டறிந்தால்,

மாரடைப்பு போன்ற அவசரகால சூழ்நிலைகளிலும் இதய பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்யலாம்

அறுவைசிகிச்சையானது எடுத்த உடனேயே அடைப்புகளை உருவாக்கிய முக்கிய இதய நோய்க்கு சிகிச்சையளிக்காது. எனவே, நீங்கள் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு வாழ்க்கை முறையின் மாற்றங்கள் அவசியமான பகுதியாக இருக்கின்றன. உங்கள் இரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்கும், இரத்த உறைவு ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைப்பதற்கும், உங்கள் இதயத்தின் செயல்பாட்டிற்கு முடிந்தவரை உதவுவதற்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருந்துகளை வழக்கமாக எடுக்க வேண்டும்.

CABG அறுவை சிகிச்சைக்கு நீங்கள் எவ்வாறு தயாராக வேண்டும்?

அறுவை சிகிச்சைக்குத் தயாராவதற்கு, உங்கள் உணவில் ஏதேனும் கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் நீங்கள் பின்பற்ற வேண்டிய மருந்துகள் குறித்து மருத்துவர் உங்களுக்கு குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்குவார். மார்பு எக்ஸ்ரேக்கள், இரத்தப்

பரிசோதனைகள், எலக்ட்ரோ கார்டியோகிராம் மற்றும் இதய ஆஞ்சியோகிராம் போன்ற பல பரிசோதனைகளை நீங்கள் அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டியதிருக்கும். இதய ஆஞ்சியோகிராம் என்பது இதயத் தமனிகளைப் பார்க்க சாயத்தைப் பயன்படுத்தும் ஒரு வகையான எக்ஸ்ரே எடுக்கும் செயல்முறையாகும். அறுவை சிகிச்சைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் மருத்துவமனையில் சேருமாறு அறிவுறுத்தப்படுவீர்கள் மற்றும் பயன்படுத்தப்படும் எதிர்ப்பு இரத்த வட்டுக்களைப் பொறுத்து அறுவை சிகிச்சைக்கு மூன்று முதல் ஏழு நாட்களுக்கு முன்பே எதிர்ப்பு இரத்த வட்டுக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

உங்கள் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வரும் வாரங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய மறக்கக்கூடாது. நீங்கள் மீண்டும் வாகனம் ஓட்டுவது, வேலைக்குத் திரும்புவது மற்றும் தினசரி வேலைகளைச் செய்தல் போன்ற நிலைக்கு நீங்கள் திரும்புவதற்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும்.

இந்த சிகிச்சை முறையின் போது

உங்களுக்கு என்ன நடக்கும்

இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பொதுவான மயக்க மருந்து தேவைப்படுகிறது. தேவையான பைபாஸின் எண்ணிக்கையானது உங்கள் இதயத்தில் அடைப்புகள் இருக்குமிடம் மற்றும் கடுமைத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்ததாகும்.

அறுவை சிகிச்சையாளர் மார்பு எலும்பிற்கு நேராக மார்பின் மையத்தில் வெட்டுகிறார். அதன்பின் அறுவை சிகிச்சையாளர் இதயத்தை வெளிப்படுத்த விலா எலும்புக் கூட்டை அகலமாகத் திறக்கிறார். மார்பு திறக்கப்பட்ட பிறகு, இந்த அறுவை சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில், இதயம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது, உடலுக்கு இரத்தத்தை அனுப்ப இதய-நுரையீரல் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இன்று, பெரும்பாலான CABG அறுவை சிகிச்சைகள் இதயம் துடிக்காத அல்லது துடிக்கும் இதய அறுவை சிகிச்சைகளாகவே இருக்கின்றன. அறுவை சிகிச்சை நிபுணர் வேலை செய்யும் இதயப் பகுதியை உறுதிப்படுத்த சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய இது உதவுகிறது.

பெரும்பாலும் மார்புச் சுவரின் உட்புறத்திலிருந்து (உட்புற மார்பு தமனி) அல்லது கீழ் காலில் இருந்து ஆரோக்கியமான இரத்த நாளத்தின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை நிபுணர் எடுத்து, அடைக்கப்பட்ட தமனிக்கு மேலேயும் கீழேயும் முனைகளை இணைக்கிறார், இதனால் இரத்த ஓட்டமானது

உங்கள் அறுவை சிகிச்சை முடிந்த உடனே என்ன நடக்கும்

CABG அறுவை சிகிச்சையின் போது பொதுவான மயக்க மருந்து பயன்படுத்தப்படுகிறது, எனவே அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல மணிநேரம் நீங்கள் மயக்கமுற்றே இருக்கக்கூடும். நீங்கள் மயக்கத்தில் இருக்கும் போதே, குறிப்பிடத்தக்க அறுவை சிகிச்சைகள் செய்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு வார்டான தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் இந்த பிரிவில் ஒன்று முதல் மூன்று நாட்கள் இருக்கக்கூடும். நீண்ட காலம் தங்குவதனால் உங்கள் CABG அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இல்லை என்று அர்த்தமில்லை. உங்கள் மயக்க மருந்து செயலிழப்பதற்கு அல்லது உங்கள் மார்பில் உள்ள திரவம் வடிவதற்கு அதிக நேரம் எடுக்கிறது என்று அர்த்தமாகும்.

நீங்கள் எழுந்திருக்கும் போது, நீங்கள் பல உணர்வுகளை கவனிக்கலாம். நீங்கள் அநேகமாக மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். மயக்க மருந்து உங்களுக்கு குமட்டல் உணர்வை ஏற்படுத்தலாம், இதனால் உங்கள் வயிறு குமட்டல் உணர்வைப் பெறலாம். உங்கள் சுவாசத்திற்கு உதவ உங்கள் தொண்டையில் வைக்கப்பட்டுள்ள குழாயின் காரணமாக உங்களால் விழுங்கவோ பேசவோ முடியாது என்பதை உடனடியாக கவனிக்கலாம்.

நீங்கள் வழக்கமான வார்டில் இருக்கும் போது, உங்களால் படுக்கையிலிருந்து எழுந்து செல்லவும் வரவும் முடியும்.

எந்த சிக்கல்களும் இல்லாமல், நீங்கள் எட்டு நாட்களுக்குள் (ஐ.சி.யூ வில் இரண்டு முதல் மூன்று நாட்கள் மற்றும் வார்டில் இரண்டு முதல் மூன்று நாட்கள்) மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவீர்கள், நீங்கள் மருத்துவமனையை விட்டு சென்ற பிறகும், அன்றாட வேலைகளைச் செய்வதற்கு அல்லது சிறிது தூரம் நடப்பதற்குக் கூட உங்களுக்கு கடினமாக இருக்கலாம்.

சுமார் ஆறு முதல் பன்னிரண்டு வாரங்கள் குணமாகும் காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும், நீங்கள் வேலைக்குத் திரும்பலாம், உடற்பயிற்சியைத் துவங்கலாம் மற்றும் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு பாலியல் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கலாம், ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

முடிவுகள்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெரும்பாலான நோயாளிகள் நன்றாக உணர்கிறார்கள் மற்றும் 10 முதல் 15 வருடங்கள் வரை நோய் அறிகுறி இல்லாமல் இருக்கலாம்.

CABG செய்த பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்

பைபாஸ் அறுவை சிகிச்சையானது இதயத்திற்கு இரத்தத்தை வழங்குவதை அதிகரிக்கிற அதே வேளையில், அடிப்படை இதய தமனி நோயை இது குணப்படுத்தாது. உங்கள் முடிவுகள் மற்றும் நீண்ட கால பலன்கள் ஆகியவை இரத்த உறைவுகளைத் தடுக்க, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க மற்றும் அறிவுறுத்தப்பட்டது போல நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நீங்கள் எடுக்கும் மருந்துகள் மற்றும் பின்வருன போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை பரிந்துரைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றைப் பொறுத்துள்ளது:

புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும்

DASH உணவு போன்ற ஆரோக்கியமான உணவு திட்டத்தைப் பின்பற்ற வேண்டும்

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்

பின்வரும் நிலை காணப்பட்டால் மருத்துவமனை மற்றும் உங்கள் மருத்துவ குழுவை தொடர்பு

கொள்ளவும் அல்லது 1066 என்ற எண்ணை அழைக்கவும்:

உங்களுக்கு கடுமையான காய்ச்சல் இருந்தால்

மிக வேகமான இதயத் துடிப்பு இருந்தால்

உங்கள் மார்புக் காயத்தைச் சுற்றி புதிய அல்லது மோசமான வலி இருந்தால்

உங்கள் மார்புக் காயத்தைச் சுற்றிலும் சிவத்தல் அல்லது இரத்தப்போக்கு இருந்தால் அல்லது உங்கள் மார்புக் காயத்திலிருந்து வேறு ஏதவாது வந்தால்

Quick Book

Request A Call Back

X