சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்வஜினல் ஹிஸ்டெரெக்டோமி – கருப்பை அகற்றுதல்

வஜினல் ஹிஸ்டெரெக்டோமி – கருப்பை அகற்றுதல்


யோனி கருப்பை நீக்கம் என்றால் என்ன?

யோனி கருப்பை நீக்கத்தின் போது, ​​யோனியின் மேல் ஒரு சிறிய அளவிலான பிளவை ஏற்படுத்தி கருப்பை வாய் மற்றும் கர்ப்பப்பை நீக்கப்படுகிறது. கருவறையை அதனுடைய இடத்தில் பிடித்து வைத்திருக்கும் தசைநார்களில் இருந்து பிரிக்க சிறப்பு அறுவை சிகிச்சை கருவிகள் யோனிக்குள் செருகப்படுகின்றன.கருப்பை மற்றும் கருப்பை வாய் அகற்றப்பட்ட பிறகு, அந்த பிளவு தைக்கப்படும்.ஒரு யோனி கருப்பை நீக்கம் பின்வரும் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி செய்ய முடியும்:பொது மயக்க மருந்து – அறுவைசிகிச்சையின் போது நீங்கள் மயக்கமடைவீர்கள் அல்லதுமுதுகெலும்பு மயக்க மருந்து – நீங்கள் இடுப்பிலிருந்து கீழே உணர்ச்சியற்றவராக இருப்பீர்கள்


கருப்பை நீக்கம் எப்போது செய்யப்படுகிறது?

கருப்பை அகற்றப்பட வேண்டியதற்கு பல காரணங்கள் உள்ளன. கருப்பை நீக்கம் மூலம் சிகிச்சையளிக்கப்படக்கூடிய சில கோளாறுகள்:மருந்துகளினால் கட்டுப்படுத்தமுடியாத தொடர்ந்த அதிக இரத்தப்போக்கு அல்லதுடைலேஸன் மற்றும் க்யூரெட்டேஜ்(டி&சி)கருப்பை திசு உருவாக்கம் மூலம் வரக்கூடிய வலி மற்றும் இரத்தப்போக்கு ஆகியவை மற்ற எந்த சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் இருப்பதுநாள்பட்ட இடுப்பு வலிபுரோலப்ஸ் கருப்பை – விழுந்த (தொய்வு) கருப்பைகருப்பையில் முன்னரே இருக்ககூடிய புற்று நோய் அல்லது புற்றுநோய் செல்கள் அல்லது கருப்பையில் இருக்கும் திசுகருப்பையில் கட்டிகள்கருப்பை அகற்றப்படக்கூடிய பிற வழிகள்:அடிவயிற்று கருப்பை நீக்கம் – அடிவயிற்றில் ஒரு வெட்டு மூலம் கருப்பையை அகற்றுதல்லாபரோஸ்கோபிக் கருப்பை நீக்க முறையில் அடிவயிற்றில் செய்யப்பட்ட துல்லியமான துளை கீறல்கள் மூலம் கருப்பையை அகற்றுதல் ரோபோடிக் கருப்பை நீக்க முறையில் துல்லியமான துளைகளை அடிவயிற்றில் இட்டு அதன் மூலம் நீக்குதல்  ஹிஸ்டரோஸ்கோபி, லேபராஸ்கோபி, ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆகியவை இதற்குப் பயன்படுத்தப்படலாம்:கருப்பையை அகற்றாமல் எண்டோமெட்ரியோசிஸின் ஒரு பகுதியை மட்டும் அகற்றவும் கருப்பையை அகற்றாமல் கட்டிகளை (நார்த்திசுக்கட்டிகளை) மட்டும் அகற்றவும்இந்த தேர்வுகள் குறித்து நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டும், ஆனால் உங்கள் உடலின் மருத்துவ நிலைக்கு பொருத்தமான கருப்பை நீக்கம் செய்யும் முறையை உங்கள் மருத்துவர் தேர்ந்தெடுத்திருப்பார் என்பதை நீங்கள் காண்பீர்கள். சில நுட்பங்கள் உங்கள் மருத்துவ நிலைக்கு பொருந்தாது.

யோனி கருப்பை நீக்கம் செய்ய நான் எவ்வாறு தயாராக இருப்பது?

அறுவைசிகிச்சைக்குப் பிறகு உங்கள் கவனிப்பு மற்றும் மீள் நிலைக்கு திட்டமிடுங்கள், குறிப்பாக நீங்கள் பொது மயக்க மருந்து இருந்தால். உங்கள் வேலையில் இருந்து ஓய்வெடுக்க தேவையான நேரம் கேட்டு கொள்ளுங்கள். உங்கள் அன்றாட கடமைகளுக்கு உதவும் தேவையான நபர்களை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கவும். நீங்கள் ஒரு மருத்துவ நிலைக்கு தினசரி ஆஸ்பிரின் எடுப்பவராக இருந்தால், உங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பு அதை உட்கொள்வதை நிறுத்த வேண்டுமா என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுகொள்ளுங்கள்.நீங்கள் என்ன மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை உங்கள் மருத்துவரிடம் சொல்ல மறக்காதீர்கள். இரத்த பரிசோதனைகள், ஈ.சி.ஜி, மார்பு எக்ஸ்ரே போன்ற மயக்க மருந்து கொடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய பரிசோதனைகளுக்கு நீங்கள் உட்படுத்தப்படலாம், மேலும் இந்த பரிசோதனைகள் மயக்க மருந்து செலுத்துவதற்கு உங்கள் உடல் ஒத்துழைக்குமா என்பதை மயக்க மருந்து நிபுணர் குழு தீர்மானிக்க உதவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கு வழங்கும் அறுவை சிகிச்சை முன் பின்பற்ற கூடிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றவும். அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவில் நீங்கள் ஒரு லேசான உணவை சாப்பிட பரிந்துரைக்கலாம். திரவ உணவுகளை  நிறுத்துமாறு மருத்துவர் கேட்ட நேரத்திற்குப் பிறகு காபி, தேநீர், தண்ணீர் அல்லது எந்த திரவத்தையும் குடிக்க வேண்டாம். அறுவைசிகிச்சைக்கு முந்தைய இரவு ஒரு மலமிளக்கியோ அல்லது

அறுவைசிகிச்சைக்கு முந்தைய காலையில் ஒரு எனிமாவையோ எடுக்க உங்களுக்கு அவைகள் வழங்கப்படலாம்.அறுவை சிகிச்சை நடைமுறைக்குப் பிறகு என்ன நடக்கும்?

அறுவைசிகிச்சைக்கு 1 அல்லது 2 நாட்களுக்குப் பிறகு IV(குளுக்கோஸ்) மற்றும் சிறு நீர் குழாய் அகற்றப்படுகின்றன. நீங்கள் 3 முதல் 5 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும்.நீங்கள் வீட்டிற்குச் சென்ற பிறகு, முழு ஓய்வு எடுக்க வேண்டும். எந்தவொரு கனமான பொருளையும் தூக்கும் செயலையும் செய்ய வேண்டாம் அல்லது 4 முதல் 6 வாரங்களுக்கு அடிவயிற்று தசைகளை  அதற்கான பெல்ட் உபயோகப்படுத்தி பிடித்து வைக்கவும்.வலியைக் கையாள்வதற்கும் மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உங்கள் மருத்துவ ஆலோசகரின் வழிமுறைகளைப் பின்பற்றவும் .அறுவைசிகிச்சைக்கு முன்னர் உங்களுக்கு மாதவிடாய் இருந்தால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களுக்கு அது இருக்காது. நீங்கள் கர்ப்பமாக முடியாது. உங்கள் கருப்பைகள் அகற்றப்பட்டதால், மாதவிடாய் நிறுத்தம் இப்போதே தொடங்குகிறது, உங்கள் மருத்துவர் ஹார்மோன் சிகிச்சையை பரிந்துரைக்கலாம். இதன் பாதிப்புகள் மற்றும் சிகிச்சையைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், அறுவை சிகிச்சைக்கு முன் உங்கள் மருத்துவரிடம் விவாதிக்க மறக்காதீர்கள்.யோனி கருப்பை நீக்கம் செய்யப்பட்ட பிறகு நான் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

பொது மயக்க மருந்துகளின் பின் விளைவுகள்பெரும்பாலான நவீன மயக்க மருந்துகள் குறுகிய காலமே நீடிக்கும். எனவே உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு நாளுக்கு மேல் நீங்கள் எந்தவொரு பின்விளைவுகளையும் சந்திக்கக்கூடாது. முதல் 24 மணிநேரத்தில் நீங்கள் வழக்கத்தை விட அதிக தூக்கத்தை உணரலாம் மற்றும் நீங்கள் நிலையற்றவர்களாக உணர்வீர்கள்.சிறுநீர் குழாய்உங்கள் சிறுநீர்பையில் உங்களின் சிறு நீரை வெளியே அனுப்புவதற்கு கத்தீட்டர் என்ற ஒரு சிறு நீர் வடிகுழாய் இருக்கலாம். இது உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 24 மணிநேரம் வரை இருக்கும் அல்லது நீங்கள் சிறுநீர் கழிப்பதற்கு கழிப்பறைக்கு நடந்து செல்லும் பெலன் வரும் வரை இது இருக்கலாம். சிறுநீர் கழிப்பதில் சிரமங்கள் இருந்தால், இன்னும் சில நாட்களுக்கு நீங்கள் சிறு நீர் வடிகுழாய் வைத்திருக்க வேண்டியிருக்கும்.வடுக்கள்உங்கள் யோனி வழியாக ஒரு

யோனி கருப்பை நீக்கம் செய்யப்படுகிறது, எனவே வடு பார்வைக்கு வெளியே தெரியாது. இருப்பினும், உங்கள் செயல்பாட்டின் ஒரு பகுதியாக கீஹோல் (துல்லிய துளை) அறுவை சிகிச்சை

செய்தால், உங்கள் அடிவயிற்றின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு முதல் நான்கு சிறிய வடுக்கள் இருக்கும். வடு 0.5 செ.மீ முதல் 1 செ.மீ வரை எங்காகிலும் இருக்கும்.தையல் மற்றும் கட்டுகள்உங்கள் யோனியில் உள்ள தையல்கள் கரைந்து போகும் என்பதால் அவற்றை அகற்ற தேவையில்லை. முழு தையலோஅல்லது  தையலின் ஒரு பகுதியோ, சில நாட்களுக்குப் பிறகு அல்லது சில வாரங்களுக்குப் பிறகு வருவதை நீங்கள் கவனிக்கலாம். இது சாதாரணமானது மற்றும் கவலைப்பட ஒன்றுமில்லை. உங்களுக்கு கீஹோல் அறுவை சிகிச்சை இருந்தால், உங்கள் வெட்டுக்கள் தையல் அல்லது பசை மூலம் மூடப்படலாம். பசை மற்றும் சில தையல்கள் தானாகவே கரைக்கின்றன. பிற தையல்களை அகற்ற வேண்டியிருக்கலாம், இது குறித்த தகவல் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் வெட்டுக்கள் ஆரம்பத்தில் ஒரு துணி கட்டு மூலம் மூடப்பட்டிருக்கும்.பொதிகள்இரத்தப்போக்கு அபாயத்தைக் குறைக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்கள் யோனியில் ஒரு பொதி இருக்கலாம் . நீங்கள் மருத்துவமனையில் இருக்கும்போது ஒரு செவிலியர் உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இதை அகற்றுவார்.யோனி இரத்தப்போக்குஉங்கள் அறுவை சிகிச்சை முறைக்குப் பிறகு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு யோனியில் இரத்தப்போக்கு ஏற்படுவதை எதிர்பார்க்கலாம். இது ஒரு சாதாரண ஒன்று தான் மற்றும் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். சில பெண்களுக்கு ஆரம்பத்தில் சிறிதளவு வந்து அல்லது இரத்தப்போக்கு நின்று விடும், பின்னர் 10 நாட்களுக்குப் பிறகு திடீரென பழைய இரத்தம் அல்லது திரவம் வெளிவரும். இது பொதுவாக விரைவாக நின்று விடும். டம்பான்களைப்(ஒரு வகையான பேட்) பயன்படுத்துவது தொற்று அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால் நீங்கள் டம்பான்களைக் காட்டிலும் சுத்தாமான சானிட்டரி டவல்களைப் பயன்படுத்த வேண்டும்.வலி மற்றும் அசௌகரியம்உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில நாட்களுக்கு உங்கள் அடிவயிற்றில் வலி மற்றும் சங்கடத்தை எதிர்பார்க்கலாம். மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது, ​​நீங்கள் அனுபவிக்கும் வலிக்கு வலி நிவாரணி மருந்துகள் உங்களுக்கு வழங்கப்படும்.சிக்கிய காற்றுஅறுவைசிகிச்சைக்குப் பிறகு உங்கள் குடல் மெதுவாக வேலை செய்யும் என்பதால் காற்று அல்லது ‘காற்று பண்டல்கள்’ சிக்கிவிடும். இது வெளியேறும் வரை இது சில அசௌகரியங்களை ஏற்படுத்தும். படுக்கையில் இருந்து எழுந்து ஒரு சிறிய நடைப்பயிற்ச்சி மேற்கொள்வது இந்த காற்று வெளியேற உங்களுக்கு உதவும். உங்கள் குடல் நகர ஆரம்பித்தவுடன், சிக்கிய காற்று வெளியேறும்.திரவ மற்றும் திட உணவு உட்கொள்ளுதல்அறுவைசிகிச்சைக்குப் பிறகு, திரவங்களை ஏற்றுவதற்கு  உங்கள் கையில் ஒரு ஊசி துளை இருக்கும். உங்களலால்  மீண்டும் திரவ உணவை எடுக்க முடிந்தால், இந்த துளை நீக்கப்படும். உங்களுக்கு தண்ணீர் அல்லது ஒரு கப் தேநீர் மற்றும் சாப்பிட லேசான ஆகாரம் ஏதாவது வழங்கப்படும்.இரத்த உறைதல் உருவாக்கம் – ஆபத்தை எவ்வாறு குறைப்பதுஎந்தவொரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உங்கள் கால்கள் மற்றும் இடுப்பு (ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ்) ஆகியவற்றில் உள்ள நரம்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாக ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. இந்த கட்டிகள் நுரையீரலுக்கு (நுரையீரல் தக்கையடைப்பு) பயணிக்கக்கூடும், இது உயிருக்கு ஆபத்தானது. இந்த இரத்த உறைவுகளின் அபாயத்தை நீங்கள் கீழ்கண்ட செயல்கள் மூலம் குறைக்கலாம்: உங்கள் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு முடிந்தவரை விரைவாக நடக்க / நகர்த்தத் தொடங்குங்கள்.நீங்கள் ஓய்வெடுக்கும்போது உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள், எடுத்துக்காட்டாக: உங்கள் கணுக்கால்களுக்கு  அசைவு அளிப்பதன் மூலம் ஒவ்வொரு காலையும் 30 விநாடிகளுக்கு விறுவிறுப்பாக பம்ப் செய்யுங்கள் அல்லது ஒவ்வொரு காலையும் ஒரு வட்ட இயக்கத்தில் 30 விநாடிகள் நகர்த்தி, உங்கள் கால்களை வளைத்து நிமிர்த்தி பயிற்ச்சி செய்யவும் – ஒரே நேரத்தில் ஒரு கால் என, மூன்று முறை ஒவ்வொரு காலுக்கும் பயிற்ச்சி அளிக்கவும்.உறைதல் உருவாகும் அபாயத்தைக் குறைக்க பிற முறைகளையும்  கடைப்பிடிக்க நீங்கள் அறிவுறுத்த படலாம் , குறிப்பாக நீங்கள் அதிக எடை கொண்டவராக இருந்தால் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால்.உடற்பயிற்சி(பிஸியோ தெரபி) சிகிச்சை நீங்கள் சிரமமின்றி நடக்கவும் உங்கள் பலவீனத்திலிருந்து உங்களை விரைவாக மீட்க உதவும் பயிற்சிகள் பற்றிய வழிகாட்டுதலும் தகவலும் உங்களுக்கு வழங்கப்படும். சோர்வு மற்றும் உணர்ச்சிவயப்படுதல்உங்கள் உடல் தன்னைக் குணப்படுத்த நிறைய சக்தியைப் பயன்படுத்த ஆரம்பிப்பதால், அறுவை சிகிச்சைக்குப் பின் நீங்கள் சோர்வாக உணரலாம். முதல் சில நாட்களுக்கு நீங்கள் பகலில் ஒரு சிறிய தூக்கத்தை எடுக்க வேண்டியிருக்கும்.  கருப்பை நீக்கம் உணர்ச்சிகரமானதாகவும் அதிர்ச்சிகரமானதாகவும் இருப்பதால், இந்த கட்டத்தில் பல பெண்கள் கண்ணீர் சிந்தியும், உணர்ச்சி வயப்படுகிறார்கள்.கருப்பை நீக்கத்திற்கு பிறகு மீள் நிலை(ரெக்கவரி) அடைவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டால் என்ன செய்வது உங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு உடல்நல சிக்கல்கள் இருந்தது உண்டானால்; எடுத்துக்காட்டாக, நீரிழிவு நோயாளிகள் மெதுவான வேகத்தில் குணமடையக்கூடும் மற்றும் இவர்களுக்கு தொற்றுநோய்க்கு அதிக வாய்ப்புள்ளது.   நீங்கள் அதிக எடையுடன் இருக்கிறீர்கள் – நோயாளிகள் மயக்க மருந்துகளின் விளைவுகளிலிருந்து மீள நீண்ட காலம் ஆகலாம், மேலும் தொற்று மற்றும் த்ரோம்போசிஸ் போன்ற சிக்கல்கள்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. உங்கள் அறுவை சிகிச்சையின் போது இருந்த வேறு ஏதேனும் உடல் நல கோளாறுகள்.இந்த தகவலைப் பற்றிநீங்கள் இந்த தகவலை படித்த பிறகு வேறு ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதையும் இதோடு சேர்த்து உங்களின் தேர்வு மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய ஆலோசனைகளை பெறுதல் நலம். இந்த தகவல் பொதுவான ஆலோசனைகளை வழங்குகிறது. ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு தேவைகளைக் கொண்டுள்ளனர் மற்றும் வெவ்வேறு வழிகளில் மீண்டு வருகிறார்கள். உங்கள் சொந்த மீட்பு பின்வருபவற்றைப் பொறுத்தது:   

உங்களின் அறுவை சிகிச்சைக்கு நீங்கள் எவ்வாறு நல்ல உடல் நலத்துடன் இருக்கிறீர்கள்?

நீங்கள் கருப்பை நீக்கம் செய்ய காரணம் உங்களுக்கான சரியான கருப்பை நீக்க முறை அறுவை சிகிச்சை எவ்வளவு சீராக செல்கிறது மற்றும் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா.

யோனியில் உள்ள தையல்கள் கரைந்து போகும் என்பதால் அவற்றை அகற்ற தேவையில்லை. முழு தையலோஅல்லது  தையலின் ஒரு பகுதியோ, சில நாட்களுக்குப் பிறகு அல்லது சில வாரங்களுக்குப் பிறகு வருவதை நீங்கள் கவனிக்கலாம். இது சாதாரணமானது மற்றும் கவலைப்பட ஒன்றுமில்லை. உங்களுக்கு கீஹோல் அறுவை சிகிச்சை இருந்தால், உங்கள் வெட்டுக்கள் தையல் அல்லது பசை மூலம் மூடப்படலாம். பசை மற்றும் சில தையல்கள் தானாகவே கரைக்கின்றன. பிற தையல்களை அகற்ற வேண்டியிருக்கலாம், இது குறித்த தகவல் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் வெட்டுக்கள் ஆரம்பத்தில் ஒரு துணி கட்டு மூலம் மூடப்பட்டிருக்கும்.பொதிகள்இரத்தப்போக்கு அபாயத்தைக் குறைக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்கள் யோனியில் ஒரு பொதி இருக்கலாம் . நீங்கள் மருத்துவமனையில் இருக்கும்போது ஒரு செவிலியர் உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இதை அகற்றுவார்.யோனி இரத்தப்போக்குஉங்கள் அறுவை சிகிச்சை முறைக்குப் பிறகு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு யோனியில் இரத்தப்போக்கு ஏற்படுவதை எதிர்பார்க்கலாம். இது ஒரு சாதாரண ஒன்று தான் மற்றும் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். சில பெண்களுக்கு ஆரம்பத்தில் சிறிதளவு வந்து அல்லது இரத்தப்போக்கு நின்று விடும், பின்னர் 10 நாட்களுக்குப் பிறகு திடீரென பழைய இரத்தம் அல்லது திரவம் வெளிவரும். இது பொதுவாக விரைவாக நின்று விடும். டம்பான்களைப்(ஒரு வகையான பேட்) பயன்படுத்துவது தொற்று அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால் நீங்கள் டம்பான்களைக் காட்டிலும் சுத்தாமான சானிட்டரி டவல்களைப் பயன்படுத்த வேண்டும்.வலி மற்றும் அசௌகரியம்உங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில நாட்களுக்கு உங்கள் அடிவயிற்றில் வலி மற்றும் சங்கடத்தை எதிர்பார்க்கலாம். மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது, ​​நீங்கள் அனுபவிக்கும் வலிக்கு வலி நிவாரணி மருந்துகள் உங்களுக்கு வழங்கப்படும்.சிக்கிய காற்றுஅறுவைசிகிச்சைக்குப் பிறகு உங்கள் குடல் மெதுவாக வேலை செய்யும் என்பதால் காற்று அல்லது ‘காற்று பண்டல்கள்’ சிக்கிவிடும். இது வெளியேறும் வரை இது சில அசௌகரியங்களை ஏற்படுத்தும். படுக்கையில் இருந்து எழுந்து ஒரு சிறிய நடைப்பயிற்ச்சி மேற்கொள்வது இந்த காற்று வெளியேற உங்களுக்கு உதவும். உங்கள் குடல் நகர ஆரம்பித்தவுடன், சிக்கிய காற்று வெளியேறும்.திரவ மற்றும் திட உணவு உட்கொள்ளுதல்அறுவைசிகிச்சைக்குப் பிறகு, திரவங்களை ஏற்றுவதற்கு  உங்கள் கையில் ஒரு ஊசி துளை இருக்கும். உங்களலால்  மீண்டும் திரவ உணவை எடுக்க முடிந்தால், இந்த துளை நீக்கப்படும். உங்களுக்கு தண்ணீர் அல்லது ஒரு கப் தேநீர் மற்றும் சாப்பிட லேசான ஆகாரம் ஏதாவது வழங்கப்படும்.இரத்த உறைதல் உருவாக்கம் – ஆபத்தை எவ்வாறு குறைப்பதுஎந்தவொரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உங்கள் கால்கள் மற்றும் இடுப்பு (ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ்) ஆகியவற்றில் உள்ள நரம்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாக ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. இந்த கட்டிகள் நுரையீரலுக்கு (நுரையீரல் தக்கையடைப்பு) பயணிக்கக்கூடும், இது உயிருக்கு ஆபத்தானது. இந்த இரத்த உறைவுகளின் அபாயத்தை நீங்கள் கீழ்கண்ட செயல்கள் மூலம் குறைக்கலாம்: உங்கள் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு முடிந்தவரை விரைவாக நடக்க / நகர்த்தத் தொடங்குங்கள்.நீங்கள் ஓய்வெடுக்கும்போது உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள், எடுத்துக்காட்டாக: உங்கள் கணுக்கால்களுக்கு  அசைவு அளிப்பதன் மூலம் ஒவ்வொரு காலையும் 30 விநாடிகளுக்கு விறுவிறுப்பாக பம்ப் செய்யுங்கள் அல்லது ஒவ்வொரு காலையும் ஒரு வட்ட இயக்கத்தில் 30 விநாடிகள் நகர்த்தி, உங்கள் கால்களை வளைத்து நிமிர்த்தி பயிற்ச்சி செய்யவும் – ஒரே நேரத்தில் ஒரு கால் என, மூன்று முறை ஒவ்வொரு காலுக்கும் பயிற்ச்சி அளிக்கவும்.உறைதல் உருவாகும் அபாயத்தைக் குறைக்க பிற முறைகளையும்  கடைப்பிடிக்க நீங்கள் அறிவுறுத்த படலாம் , குறிப்பாக நீங்கள் அதிக எடை கொண்டவராக இருந்தால் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால்.உடற்பயிற்சி(பிஸியோ தெரபி) சிகிச்சை நீங்கள் சிரமமின்றி நடக்கவும் உங்கள் பலவீனத்திலிருந்து உங்களை விரைவாக மீட்க உதவும் பயிற்சிகள் பற்றிய வழிகாட்டுதலும் தகவலும் உங்களுக்கு வழங்கப்படும். சோர்வு மற்றும் உணர்ச்சிவயப்படுதல்உங்கள் உடல் தன்னைக் குணப்படுத்த நிறைய சக்தியைப் பயன்படுத்த ஆரம்பிப்பதால், அறுவை சிகிச்சைக்குப் பின் நீங்கள் சோர்வாக உணரலாம். முதல் சில நாட்களுக்கு நீங்கள் பகலில் ஒரு சிறிய தூக்கத்தை எடுக்க வேண்டியிருக்கும்.  கருப்பை நீக்கம் உணர்ச்சிகரமானதாகவும் அதிர்ச்சிகரமானதாகவும் இருப்பதால், இந்த கட்டத்தில் பல பெண்கள் கண்ணீர் சிந்தியும், உணர்ச்சி வயப்படுகிறார்கள்.கருப்பை நீக்கத்திற்கு பிறகு மீள் நிலை(ரெக்கவரி) அடைவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டால் என்ன செய்வது உங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு உடல்நல சிக்கல்கள் இருந்தது உண்டானால்; எடுத்துக்காட்டாக, நீரிழிவு நோயாளிகள் மெதுவான வேகத்தில் குணமடையக்கூடும் மற்றும் இவர்களுக்கு தொற்றுநோய்க்கு அதிக வாய்ப்புள்ளது.   நீங்கள் அதிக எடையுடன் இருக்கிறீர்கள் – நோயாளிகள் மயக்க மருந்துகளின் விளைவுகளிலிருந்து மீள நீண்ட காலம் ஆகலாம், மேலும் தொற்று மற்றும் த்ரோம்போசிஸ் போன்ற சிக்கல்கள்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. உங்கள் அறுவை சிகிச்சையின் போது இருந்த வேறு ஏதேனும் உடல் நல கோளாறுகள்.இந்த தகவலைப் பற்றிநீங்கள் இந்த தகவலை படித்த பிறகு வேறு ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதையும் இதோடு சேர்த்து உங்களின் தேர்வு மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய ஆலோசனைகளை பெறுதல் நலம். இந்த தகவல் பொதுவான ஆலோசனைகளை வழங்குகிறது. ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு தேவைகளைக் கொண்டுள்ளனர் மற்றும் வெவ்வேறு வழிகளில் மீண்டு வருகிறார்கள். உங்கள் சொந்த மீட்பு பின்வருபவற்றைப் பொறுத்தது:   உங்களின் அறுவை சிகிச்சைக்கு நீங்கள் எவ்வாறு நல்ல உடல் நலத்துடன் இருக்கிறீர்கள்?நீங்கள் கருப்பை நீக்கம் செய்ய காரணம் உங்களுக்கான சரியான கருப்பை நீக்க முறை அறுவை சிகிச்சை எவ்வளவு சீராக செல்கிறது மற்றும் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா.

Quick Book

Request A Call Back

X